யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட லோசனாதேவி ராஜகோபால் அவர்கள் 28-01-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம், நாகம்மா தம்பதிகளின் ஆசைப் புதல்வியும்,
வேலாயுதம்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ராஜகோபால் வேலாயுதம்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
தேவசேனன்(Devan), லோஹினி, குமுதினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தனுஷா, அருண் ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான குணலட்சுமி, சரோஜினிதேவி மற்றும் மோட்சலட்சுமி, சகுந்தலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சோதிராஜா, உருத்திரராஜா, விமலராஜா ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரியும்,கிருத்திகா, அருண், கல்(Kal), நிலா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.