யாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருவருட்செல்வன் நித்தியவாணி அவர்கள் 14-01-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பிகாபதி(முன்னாள் வேலணை தபால் ஊழியர்), சொர்ணகாந்தி(வேலணை) தம்பதிகளின் பாசமிகு இரண்டாவது மகளும்,
காலஞ்சென்ற சிவசாமி, நாமகள்(புளியங்கூடல்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திருவருட்செல்வன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சானுகன், யதுசிகா, கஜீபன், கஜலக்சன் ஆகியோரின் அருமை தாயாரும்,
சத்தியவாணி, வாமணன், வாமினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வநாயகம், புஸ்பராணி, உதயகுமாரி, வசந்தகுமாரி, தவச்செல்வன், யசோதரன், காலஞ்சென்ற சிறிதரன், பாலசிறிதரன், சுகந்தி, உதயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வத்சலா, கணநாதன், இளந்திரையன், ரவீந்திரன், விஜிதா, ரஞ்சனா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-01-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலணை அம்பலவி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.