யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆனந்தராசா உதயராணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 18-01-2022
உயிர் தந்த எம் அன்னையே
ஓராண்டு போனதம்மா
உன் முகம் பாராமல்
கனவுகள் நிறைவேறும் காலமதில்
காலன் அவன் அழைத்து விட்டான்
உங்கள் கனவை கலைத்து விட்டான்
யாருக்கு யார் ஆறுதல்
சொல்வதென்று தெரியாது..?
கலங்கி நிற்கின்றோம்
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம் முன்னே உங்கள் முகம்
என்னாளும் உயிர் வாழும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!