மரண அறிவித்தல்


திரு விசுவலிங்கம் செல்வராசா
Born 07/07/1945 - Death 13/01/2022 மானிப்பாய் (Birth Place) பூநகரி (Lived Place)யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் நாடு பூநகரியை வதிவிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் செல்வராசா அவர்கள் 13-01-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விசுவலிங்கம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி, லக்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
சிவகுமார்(கனடா), விஜயகுமாரி(கவிதா- நோர்வே), ரவிக்குமார்(லண்டன்), சசிகுமார்(லண்டன்), நித்தியகுமாரி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, புலேந்திரன், இரத்னசிங்கம், கனகரத்தினம், பூமணி, பாலசிங்கம், தனபாலசிங்கம், செல்வரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வாசுகி, நகுலேஸ்வரன், சிந்துஜா, ராதிகா, சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நவரட்ணம், பரமேஸ்வரி(ஜேர்மனி), காலஞ்சென்ற கற்பகமலர் ஆகியோரின் மைத்துனரும்,
நிதுஷா, மதுஷா, திபிஷா, முகிலன், வானகி, சிதுர்ஷா, ஷானுகா, அஜேஷ், கவிஷா, தினுஷ், அனுஷ், அபிநிதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-01-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூநகரி 05 ஆம் கட்டை இநொச்சி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
No Education Details
No Workplace Details