யாழ். மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு அன்டர்சன் தொடர்மாடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சீனிவாசகம் இராமநாதன்(Retired Deputy Director of Customs) அவர்கள் 11-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிதம்பரபிள்ளை, கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சற்குணேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தமயந்தி, விஜயந்தி(பிரித்தானியா), கிருஷாந்தி(பிரித்தானியா), சஞ்சீவன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ரவீந்திரன், Dr.கதிர்காமர், முரளீதரன், இவோனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி(கனடா), புவனேஸ்வரி தாமோதரம்பிள்ளை(கனடா), காலஞ்சென்றவர்களான அகிலேஸ்வரி, ஜெயநாதன், பத்மநாதன் மற்றும் புஸ்பநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வன்னியசிங்கம், அலோசியஸ் மற்றும் சாரதாதேவி, லோகேஸ்வரி, சத்தியமோகனா, இந்திராதேவி, காலஞ்சென்ற இராமலிங்கம், சோமேஸ்வரி குமாரசாமி, நித்தியானந்தம், சிவானந்தம், பரமானந்தம், கிருஷ்னானந்தம், குமரேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,
தனுஷன், வைசாலி, கௌசிகன், கீர்த்திகன், மாதவன், அர்ச்சனா, ஒலிவியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-01-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் ஜெயரட்ண மலர்ச்சாலையில்(Evitigale Mawatha Colombo - 08) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.