யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லையா பரம்சோதி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புக்கு இலக்கணமாய்
அறிவுக்கு அகல் விளக்காய்
பக்திக்கு இருப்பிடமாய்
பாசத்தின் ஒளி விளக்காய்
கண்ணை இமை காப்பதுபோல் - எமை
காவல் காத்த எம் காவல் தெய்வமே
கலையாத உன் முகமும்
கள்ளமில்லா உம் சிரிப்பும்
காண்பது எப்போது எம் இதய தெய்வமே
உன் உருவம் மறைந்தாலும்
நின் உயிர் எப்போதும் எம்மோடு தான்
இருக்கின்றது அன்புத் தெய்வமே
ஐந்து ஆண்டு ஆயிரம் ஆண்டானாலும்
நித்தம் உம் நினைவுகளோடு
நின் பாதமலர் பணிகின்றோம் பாசத்துடன்