மரண அறிவித்தல்


திரு மைக்கேல் அன்ரனி
Born 16/12/1947 - Death 05/01/2022 யாழ்ப்பாணம் (Birth Place) யாழ்ப்பாணம் (Lived Place)யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மைக்கேல் அன்ரனி அவர்கள் 05-01-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மைக்கேல், ராசமணி தம்பதிகளின் இளைய புதல்வரும்,
காலஞ்சென்ற செபமாலை, பரிமளம் தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும்,
ரோஸ் டிலிமா(ராசா) அவர்களின் அன்புக் கணவரும்,
டனிக் வினோத்காந்த்(Holland), வோல்டன் விஜித்காந்த்(இலங்கை), அனுத் ரோஜினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஹேமா(Holland), யசோ(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கற்றறின், சரோன், ஸ்ரிவன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
செல்வராஜ், லீலியட், காலஞ்சென்ற புளோறன்ஸ், லெஸ்லி, தவம் ஜெய்சு, ஞானேஸ், யூயின், ராஜன், மெலானி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மேரிஸ்ரெல்லா(கிளி), சிறில், அஞ்சலா யூலியஸ், வசந்தி, அல்போன்ஸ், ஜெயந்தி, அன்ரன், வலன்ரைன், கனிற்றா, ஜெனிற்றா, பிறேம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பெறாமக்களின் அன்பு பெரிய தந்தையும்,
மருமக்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-01-2022 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 07-01-2022 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.