யாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். இல 16, மடம் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த வைத்தி கணபதிப்பிள்ளை அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒளிக்கீற்றின் பார்வைதனில்
வளர்ந்து வரும் மரம் போல்- உம்
அரவணைப்பில் எமை கைவசம்
கொண்டு ஆளாக்கினீர்- ஐயா
ஒன்பது ஆண்டுகளாக அந்த
பாசத்தின் பாரத்தை இழந்து
தவித்துக் கொண்டிருக்கின்றோம் ஐயா
காலத்தின் கட்டளையோ ஐயா
எமை தவிக்கவிட்டு சென்றீரோ
கண்கலங்கி நிற்கும் எம்முன்
கடவுளாகிப் போனீரோ
எத்தனை ஆண்டுகள் மாறினாலும்
உம் நினைவு எம்முன் அகலாது- ஐயா
ஒப்பிலா உமை இறைவனிடம்
ஒப்படைத்த இந்த ஒன்பதாம் ஆண்டில்
உம் மாசில்லா ஆத்மாவிற்கு
மலர்தூவி சாந்தி செய்கின்றோம்...
தகவல்: க.கண்ணதாசன்(சுவிஸ் Burgdorf), க.அகிலன்(நோர்வே Oslo)