யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் அன்னலட்சுமி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா எங்களை விட்டு
சென்று ஈராண்டு ஆனதோ
நொடியளவும் நம்பமுடியாமல் பரிதவித்து
நிற்கின்றோம்மா...
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும்....
அன்னையே உன்னைப் போன்று அன்பு செய்ய
யாரும் இல்லை இவ் உலகில்... !!
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!
பல ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நினைவுகள் பசுமையாக எம்
மனதில் என்றும் நிலைத்திருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!