யாழ். பருத்தித்துறை புலோலி மத்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா ஆழ்வாப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அன்புத் தெய்வமே அப்பா
எங்களை விட்டுப்பிரிந்து இன்று
ஓராண்டு ஆனது அப்பா.
எத்தனை இன்னல்கள் வந்தாலும் அப்பா
நீங்கள் எம்மோடு இருக்கின்றீர்கள்
என்றெண்ணி வாழ்ந்தோம்
ஆறாத்துயராய் ஆனதே
உங்கள் பிரிவு எம்முள்ளே.
அன்போடு பண்பையும்
பாசத்தையும் எம்முள் விதைத்து
எமை விட்டு இறைவனடி சென்றீர்களே
இன்னும் வாழ்ந்திருக்கலாம்
அப்பா நீங்கள் எங்களோடு.
ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!