வவுனியா நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பத்மநாதன் பரமேஸ்வரி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
விழியோடு நீர்கலந்து
ஆண்டு ஒன்றாகி போச்சு
பழிகொண்ட காலன் உமைக் கவர்ந்து
ஈராறு மாதங்களாச்சு
அழுதழுது பார்த்தோம்
வலி இன்னும் குறையவில்லை
கலையான உங்கள் முகமும்
கள்ளமில்லா புன்னகையும்
கனிவான உங்கள் பேச்சும் காண்பதெப்போ அம்மா...!!
உங்கள் உருவத்தை நாம் இழந்தோமன்றி
நின் உயிர் எம்மோடுதான் இருக்குதம்மா..!
ஆண்டொன்று சென்றதம்மா
நின் மறைவு நேற்று போல் உள்ளதம்மா
ஓராண்டு என்ன ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும்
நித்தம் உங்கள் நினைவுகளோடு
நின் பாதமலர் பணிகின்றோம் நேசத்துடன்.