மரண அறிவித்தல்


திருமதி புவிராஜசிங்கம் யோகசுகிர்தமலர் (சுகி)
Born 09/01/1967 - Death 10/12/2021 யாழ். கொடிகாமம் (Birth Place) பிரான்ஸ் Epinay-sur-Seine (Lived Place)யாழ். கொடிகாமம் அல்லாரை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Epinay-sur-Seine ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புவிராஜசிங்கம் யோகசுகிர்தமலர் அவர்கள் 10-12-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரநாதன், லீலாவதி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற சடாச்சரம், நவமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற புவிராஜசிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,மர்திகா, கெவின், காலஞ்சென்ற ஸ் ரீபன், ஜெனிக், தர்மிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரபாகரன்(பிரபா) அவர்களின் அன்பு மாமியாரும்,
பிரணவன்(Rana) அவர்களின் பாசமிகு அம்மம்மாவும்,
இந்திரன்(பிரான்ஸ்), சந்திரா(லண்டன்), ராசாத்தி(பிரான்ஸ்), சிறி(பிரான்ஸ்), ரவி(பிரான்ஸ்), சுதன்(பிரான்ஸ்), லதன்(பிரான்ஸ்), ரஞ்சன்(பிரான்ஸ்), கீதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நேசன்(ஜேர்மனி), தாசன்(இலங்கை), வசந்தி(இலங்கை), லதா(பிரான்ஸ்), பாமினி(பிரான்ஸ்), குகேந்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.