யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டம், பழைய பூங்கா வீதியை வசிப்பிடமாகவும், தற்போது Lincolnshire United Kingdom ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை கருணரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 16-12-2021
அன்பு என்னும் விழுதினை
ஆலமரம் போல் ஊன்றி
பண்பு என்னும் கதிர்களை
பகலவன் போல் பரப்பி
இமை போல் காத்து நின்றவரே
நீங்கள் பிரிந்து ஒரு வருடம்
ஓடிப்போனது இன்னமும்
நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்
உழைப்பை உரமாக்கி பாசமாய்
பணிவிடைகள் பல செய்து
வாழ்க்கை எனும் பாடத்தை
எமக்கு கற்றுத் தந்த
எமது உயிர் தந்தையே...ஓ
ராண்டு கடந்தும்
உங்கள் நினைவுகள்
எமை தினமும்
வாட்டி வதைக்கின்றது..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..