யாழ். மானிப்பாய் உடுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் சீதாலட்சுமி அவர்கள் 03-12-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகராசா சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பத்மநாதன் அவர்களின் அன்புத் துணைவியும்,
செந்தில்நாதன்(இங்கிலாந்து), லக்க்ஷனி(இலங்கை), காலஞ்சென்ற செந்தில்குமரன், வாகீஸ்வரன்(அவுஸ்திரேலியா), லோஜினி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற உமாமகேஷ்வரன், ஜெயநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பஞ்சாட்சரம், சேயோன், சர்மிளா, மேனகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துலக்க்ஷன், டனுஷன், தமிழினி, செந்தில்குமரன், யாழினி, இராவணன், லபிஷா, கார்த்தி, கபிசயன், அபிசனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் மானிப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.