யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயம்பிள்ளை பரமேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 06-12-2021
எம் இதயமென்னும் கோயிலில்
தெய்வமாய் நிறைந்திட்ட அன்னையே!
நம்பமுடியவில்லை ஓராண்டு கடந்ததை..
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
ஆறாத்துயரில் தவிக்கின்றோம்
ஆயிரம் உறவுகள் இருந்து என்ன
உன்னைப்போல் அன்பு காட்ட
ஆறுதல் கூறிட யாரும் இல்லை அம்மா..
புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது ஆனாலும்
அது உண்மை இல்லை என்று நினைத்தபின்
எம் மனம் கலங்குகிறது!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.