யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியா முதலியார் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கையா பஞ்சாசரி அவர்கள் 24-11-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி ராசையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சந்திரன்(லண்டன்), ரஞ்சி(இந்தியா) ஆகியோரின் மூத்த சகோதரியும்,
காலஞ்சென்ற தங்கையா அவர்களின் அன்பு மனைவியும்,
விஜயகுமாரி(லண்டன்), காலஞ்சென்ற உதயகுமார், வசந்தகுமாரி, வனஜா, பாமா(திருகோணமலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அற்புதநாதன்(நேசன்- லண்டன்), கண்ணன், ராயூ, பத்மநாதன், வினோ, கஜன், துசி, கலைச்செல்வி(உமா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ருக்மணிதேவி, சின்னத்துரை, மரியா, லக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தசன்- டிஷாந்தினி, நிசாந்- சிந்து, பத்மநாபன்- கிருஷாந்தினி, பகிரதன்- தாட்சாயினி, கரிபிரசாந், லவக்ர்திகா, ஜோன்சன்- கல்பனா, தரன்- தாரணி, சுமன்- லக்சி, சுயன்- சர்மி, கிசோர், தர்மிலி, சரன், அமுஜய், ஆருண் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சபாணி, சஸானி, டக்சித், ஜவன், தருன், தருனி, சங்கீத், பிரணிதா, தர்னியா, காசினி, மதுயன், கவின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-11-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 1:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் முதலியார் குளம் கரமமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.