யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், வவுனியா வேப்பங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பூமாவதி தனிநாயகம் அவர்கள் 18-11-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், அனலைதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராமநாதர் குமாரசாமி, பார்வதி குமாரசாமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
தனிநாயகம்(உதவி ஆணையாளர், இளைப்பாறிய கமநல சேவைகள் திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,
மதிவதனி(லண்டன்), சசிவதனி(லண்டன்), அகிலவதனி(நியுசிலாந்து), லோகன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தமிழ்மாறன்(லண்டன்), விசாகரட்ணம்(லண்டன் ), தர்சன்(நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான் தில்லைநாயகம், சொர்ணலட்சுமி சேதுகாவலர் மற்றும் சிவஞானம் (பிரான்சு) , சோதிநாதன் (கனடா), கமலாவதி (இலங்கை) தவநாயகி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
குணநிதி தில்லைநாயகம் (கனடா) சேதுகாவலர், மற்றும் கமலம் சிவஞானம், சொர்ணம் சோதிநாதன், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், சரஸ்வதி மாணிக்கவாசகர், மற்றும் கண்மணி தியாகராஜா, காலஞ்சென்றவர்களான பூபதி வெற்றிவேல், சுப்பிரமணியம் குமாரசாமி, மற்றும் லோகநாயகி மனோகரன் ஆகியோரின் மைத்துனியும்,
அஷ்வினி, கவின், அமித்தா, விஷ்ணு, நவின், அனிக்கா, ஆகியோரின் ஆருயிர் அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 1.00 மணியளவில் இல. 43, 6ம் ஒழுங்கை, மன்னார் வீதி, வேப்பங்குளம், வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.