யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் பூபாலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பின் தந்தையே
எத்தனை காலங்கள் போனாலும்
மறப்போமா உங்களை!
உங்களன்பு இதயமதில்
நாமிணைந்து நிற்கையிலே
பொறுக்காத காலனவன் - உங்களை
பறித்தெடுத்து சென்றதேனோ?
அப்பா எம்மை விட்டு நீங்கள்
சென்று ஆண்டு ஒன்று ஆனாலும்
உங்கள் பிரிவால் நாங்கள்
மனம் உடைந்து வாடுகின்றோம்!
இன்று போல் இருக்குதப்பா
உங்கள் இனிய நினைவுகள்
ஓராண்டு மறைந்தது எந்தவகையில்?
ஏங்குகின்றோம் உங்கள் அன்புக்காய்
கட்டிய மனைவிக்கும்,
காத்தெடுத்த பிள்ளைகட்கும்
கதையேதும் சொல்லாமல்
கதியிலே சென்றதேனோ?
கல்லறையில் தானுறங்க -
எம்மை கண்ணீரில் கடலில்
தனிமையில் விட்டுச் சென்றீரே!
மறு ஜென்மம் உண்மையெனில்
மன்றாடிக் கேட்கின்றோம் - உங்கள்
அன்புப்பிள்ளைகளாய் பிறப்பெடுக்க!
ஓராண்டென்ன ஓராயிரம் ஆண்டானாலும்
உங்கள் நினைவுகள் எம்மைவிட்டு போகாது
நிஜமாகும் உங்கள் கனவுகளுக்காக
உங்கள் ஆசியோடு இவ்வுலகில்
மனம் தளராது பயணிக்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி!!!! ஓம் சாந்தி!!!! ஓம் சாந்தி!