யாழ். சுழிபுரம் மேற்கு சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கோகிலஇசைவாணி சிவசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மறவா நினைவுகளை மனதோடு தந்துவிட்டு
இறையோடு சென்று இன்று ஒரு ஆண்டு
வார்த்தைகளால் சொல்ல முடியாத
வலிகள் உங்கள் இழப்பு!
எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்
எம் நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே அம்மா...
நீங்கள் எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை ஒன்று அல்ல பல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்....
திருப்ப முடியாத காலத்தை
உங்கள் நினைவுகளுடனும்
நிழல்ப்படத்தினூடாகவும்
திரும்பிப்பார்க்கின்றோம்......