யாழ். பாஷையூரை பிறப்பிடமாகவும், நோர்வே Bergen ஐ வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரிபன் அலெக்சாண்டர் ஜோசப் அவர்கள் 30-10-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அலெக்சாண்டர் ஜோசப் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் பஞ்சவர்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற றீற்ரா அவர்களின் அன்புக் கணவரும்,
நிக்சன், மிகிர்சன், சோபனா, கீத், பிரசன்னா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நோபேட், ஜீனா, சுசான்னா, பிரபீன்னா பெங்கர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான டெய்சி, அலோசியஸ், கிறேசியன் மற்றும் யசிந்தா, றெஜீனா, பயஸ், றொபேட் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற மார்த்தா, கிறிஸ்ரின் , றாணி, மைக்கல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுபர்னா, ஸ்ரிபனா, நேகேமியா, திரேசா, செப்பனியா, நேதானியா, நாடியா, பிரதேஷ்சன், அன்ரோனி, கோட்சன், மார்த்தா, ஜோசுவா, யேசுவா, யோகானா, எஸ்ரா, சியோன், சாறா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
நல்லடக்க நிறைவில் Kleppe bedehus , Bergheimvegen 2, 5300 Kleppest எனும் முகவரியில் நடைபெறும் நினைவு அஞ்சலி நிகழ்வில் அனைவரையும் பங்கு கொள்ளுமாறு வேண்டி நிற்கும் பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள் உறவினர்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.