திதி: 19-10-2021
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சரஸ்வதி சிற்றம்பலம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் உயிருக்குள் உயிரான தெய்வமே!
என் உலகமே நீ தான் என்றிருந்தேன்
ஏன் இப்படி நடந்தது?
என் நினைவிலும் மறக்கமுடியவில்லை!
அம்மா! உன் இனிமையான நினைவுகளை
நினைக்கும் போது நிலைகுலையச் செய்யுதம்மா!!
ஈரைந்து மாதங்கள் எமை
சுமந்து மீட்டெடுத்தாய் பரிவோடு
பாராட்டி சீராட்டி வளர்த்தெடுத்த
எம் தாயே.! உங்களை இனி
எங்கே காண்போம் அம்மா..!
உன் நினைவால் நித்தம் வாடுகின்றோம்.....
சென்ற இடம் கூராயோ காலத்தின் கோலம்
எங்களிடம் இருந்து பிரிந்து விட்டாலும்
எந்நாளும் எம் மனதில் காவியமாய்
ஆகிவிட்டீர்கள் அம்மா...