மரண அறிவித்தல்

திரு. கந்தையா சிவகுரு
Born 05/05/1937 - Death 24/02/2020 யாழ். பருத்தித்துறை (Birth Place) யாழ். அச்சுவேலி (Lived Place)யாழ். பருத்தித்துறை வல்லிபுரம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி இராசவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவகுரு அவர்கள் 24-02-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், நாகமுத்து சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பத்மாவதி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகுமாரி(குமாரி) அவர்களின் அன்புத் தந்தையும்,
சிறிரங்கநாதன்(சிறி) அவர்களின் அன்பு மாமனாரும்,
தர்மசீலன் அவர்களின் சிறிய தந்தையும்,
சுஜிபன், சுனந்தன், சுபர்னன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான பாறுவதம், செல்லர், வைரமுத்து, இளையதம்பி, தங்கம், சின்னராசா, கனகம்மா, மற்றும் கிருஸ்ணபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தருமலிங்கம், இராசமுத்து, இராசேஸ்வரி, செல்லபாக்கியம், தங்கவேலாயுதம், அன்னம், மகேஸ்வரி, திரவியம், சிவபாதசுந்தரம், கந்தர், கதிரித்தம்பி, செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற செல்லப்பாக்கியம், சபாபதி, இளையதம்பி, தேவராசா, சிகாமி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-02-2020 புதன்கிழமை அன்று மு.ப. 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.