யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mantes-la-Jolie, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மாறன் சிவசிதம்பரம் அவர்கள் 22-09-2021 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா சிவசிதம்பரம், விசாலாட்சி சிவசிதம்பரம்(சீனன்கலட்டி மத்திய மகா வித்தியாலய ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும், கந்தரோடையைச் சேர்ந்த காலஞ்சென்ற மயில்வாகனம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உஷா அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஷா(CAA dispatcher), அபிராமி, பிரசாந்தி(TDSB School Teacher Worker), ஆரபி- பிரியா(RN Nursing Student) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நந்தினி, மனோரதன், ஸ்ரீகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சங்கவி, வைஷ்ணவி, யாதவன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
சயன், நளிலை, புருஷோத்தமன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
தில்லைநாதன், பாலன், தாசன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
மனோரதன், மஞ்சு, சிவரஞ்சனி, சத்தியபாமா, போதிநாதன், உமா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.