யாழ். நீர்வேலி கந்தசாமி கோயிலடியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு விசுவமடு வள்ளுவர்புரத்தை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் சாவித்திரி அவர்கள் 20-09-2021 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம், இளையாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Dr.வல்லிபுரம் பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
பகீரதன், சிறிதரன், கேதீஸ்வரன், வசீகரன், மயூரதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவனேசமலர், காலஞ்சென்ற நிர்மலகாந்தன், செல்வராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கலையரசி, கவிதா, சித்திரா, மயூரினி, சுகன்யா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று விசுவமடுவில் நாட்டின் சுகாதார விதிமுறைகளுக்கமைய நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.