யாழ். வேலணை பிறப்பிடமாகவும் Stadt Hoerstel, Germany ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் தனலட்சுமி நித்தியானந்தன் அவர்களின் நினைவு தினம்.
களங்கமற்றதம்மா உங்கள் பாசம்
உயிரை உறைய வைத்தது உங்கள்
பிரிவு!
இந்த மண்ணில் உங்களை போல் யாரைக்
இனி நாம் காண்போம் அம்மா?
இன்றும், என்றும் எமது மனம்
உங்களை தேடிக்கொண்டேதான்
இருக்கும் அம்மா
உங்களை நினைக்கும் போதெல்லாம்
உங்கள் நினைவுத் துளிகள்
விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதம்மா!
உம்மிடத்தை நிரப்பிடவே
அண்டம் எல்லாம் தேடிவிட்டோம்
உமக்கிணையாய் யாருமில்லையம்மா!
உங்கள் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்.