யாழ். மண்டைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் ஜெயகுணதிலகம் அவர்கள் 07-07-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சட்டநாதபிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திராதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜெயசாந்தி(முன்னாள் ஆசிரியை- கிளி/முழங்காவில் ம.வி, பிரான்ஸ்), காண்டீபன், யசிந்தா, கங்காதீபன், தனுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மதிமோகன்(பிரான்ஸ்), தேவிகா, சிவநேசன், உஷாநிதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சுவாகாதேவி, ஜெயசோதி(சின்னராசா), சுசிலாதேவி, ராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கண்மணி, சிவபாதலிங்கம், மற்றும் சந்திரபாலு ஆகியோரின் மைத்துனரும்,
பிறேமகாந்தன்(சுந்தர்), கபிலினி, சுதர்ஷினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு பெரியதந்தையும்,
பார்த்தீபன், பாண்டியன், ஜெயசுந்தரேசன்(கனடா), ஜெயகிருஷ்ணா, விஜய், கெளரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மலரவன், சாருகேஷ், சாணிகா, நர்மிஷா, ஜெய்சனன், மதுமிதா(பிரான்ஸ்), வைஷ்ணவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-07-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மண்டைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.