யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இராசாவின் தோட்டத்தை வதிவிடமாகவும் கொண்ட வில்பிறட் பிறேமாவதி அவர்கள் 02-07-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சவரிமுத்து அக்கினேஸ் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான காயித்தாம்பிள்ளை மாரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கயித்தாம்பிள்ளை வில்பிறட் அவர்களின் அன்பு மனைவியும்,
நிக்சன்(மதன்), ஜெனிற்றா, றீகன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லீலாவதி(கனடா), சிவா, ரஞ்சன், காலஞ்சென்றவர்களான ரத்தினகுமார், ராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நற்குணம்(கனடா), சரஸ்வதி, காந்திமதி, ஆனந்தி, செல்வம், நானம், குணசீலி, மலர், காலஞ்சென்றவர்களான ராசன், ராசதுறை, எட்வேர்ட், திரேசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சுசி, நிக்சன், அருணா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சஞ்ஜே, அபித்தா, சஜித், சானுயன், சியோனி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வு 03-07-2021 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.