மரண அறிவித்தல்

திரு புதியார் நமசிவாயம்
Born 01/07/1940 - Death 30/05/2021 அல்வாய் (Birth Place) அல்வாய் (Lived Place)யாழ். அல்வாய் வடமேற்கு மாறாம்புலத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புதியார் நமசிவாயம்(உரிமையாளர் ஈஸ்டன் மோட்டோஸ் அரசடி, மட்டக்களப்பு) அவர்கள்9 30-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற புதியார், சிவகாமி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவநேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,ஆழ்வாப்பிள்ளை, கதிரவேலு, விநாயகமூர்த்தி, வல்லியாள், பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தபோஜினி(போதனாசிரியை - முறைசாரா கல்விப் பிரிவு), நிஜாந்தினி(ஆசிரியை- சண்முக இந்து மகளிர் கல்லூரி- திருகோணமலை), அகிலன்(லண்டன்), மயூரன்(அபிவிருத்தி உத்தியோகத்தர்- உள்ளூராட்சித் திணைக்களம்- வடமாகாணம்), பிரதீபன்(லண்டன்), சுகந்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவீந்திரன்(தொழில் அலுவலர்- தொழில் திணைக்களம்- திருகோணமலை), ரதிப்பிரியா(லண்டன்), யோகேஸ்வரி(அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச சபை- பருத்தித்துறை), ஆதிலக்ஷ்மி(லண்டன்), கதிரேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுரபிகா, பிரணித், அக்சிகா, ஆருஷி, டிதுர்ஷி, சாருஷி, யஸ்வி, லத்மிகா, சஞ்சித், ஹர்ஷன், விகாஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-05-2021 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திக்கம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.