யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னம்மா செல்லத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தாயே
ஆண்டு ஒன்று மறைந்தாலும்
ஆறிடுமோ எங்கள் துயரமம்மா?
உயிர் தந்து எமை வளர்த்து
மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த
உத்தமியே எங்கள் அன்புத் தெய்வமே
என்ன தவம் செய்தோமோ நீ எமக்கு கிடைத்திடவே
உன் உடல் தான் பிரிந்தாலும் நீ என்றும் எம்முடனே
நீ தந்த அன்பு என்றும்
நிலைத்து நிற்க்கும் நினைவுகளாய்
உம்மோடு வாழ்ந்த பசுமையான
நினைவுகள் என்றும் எம்மைவிட்டு நீங்காது!!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், மற்றும் உற்றார் உறவினர்கள்