யாழ். கொக்குவில் பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் சதாரூபவதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இல்லறப்பூங்காவில் இனிய நல்மனையாளாய்
எம் குலம் காக்க வந்த எம் தெய்வமே
முத்துச் சுடரெனவே நான்கு நன்மக்களை
பெற்று முறையாய் வளர்த்தீர்கள்
இளமையில் குடும்பபாரம் போக்க
குறையாது முயன்றவரே
உடன்பிறப்புகளையும் உளமாற
வாழவைக்க அயராது உழைத்தவரே
பத்து மாதம் கருவில் எம்மை பாசமாய் சுமந்தவரே
பல வலிகளை பொறுத்து எமை பெற்றவரே
பண்பில் நாங்க சிறந்திருக்க கல்லியை கொடுத்தவரே
அளகான புன்சிரிப்பை கொண்டவரே
உதவி என்று யார் கேட்டாலும்
ஓடோடி செய்பவரே
இந்த பாரினில் பாசமக்களை தனியே
தவிக்க விட்டு எங்கு சென்றீர்கள் அம்மா..!!
உங்கள் மறைவின் வலிகளை
என் மனதோடு என்றும் சுமக்கின்றேன் அம்மா
கவலையில் நானிருந்தால் என்னை தாங்கியவரே
துன்பம் வரும் வேளையெல்லாம்
துவண்டு நான் கண்ணீர் விட
அருகில் இருந்தென்னை ஆசுவாசப்படுத்தியவரே
உங்களது நல்வாழ்வால் மற்றவரையும்
சிறப்புடனே வாழவைத்தவரே
நினைத்திருப்போம் நாளும் உங்களை அம்மா!!
அவனியில் எமை அரவணைக்க
இனி யார் இருக்கா அம்மா?
ஆயிரம் ஜென்மம் எடுத்து பிறந்தாலும் – அம்மா
உன் கருவறையில் மீண்டும் பிறக்கும் வரம் வேண்டும் !
உங்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிநிற்கும்
பிள்ளைகள், மருமக்கள், சகோதரங்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர்கள்.