யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கைலாசபிள்ளை கணேசையா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு என்னும் விழுதினை
ஆலமரம் போல் ஊன்றி
பண்பு என்னும் கதிர்களை
பகலவன் போல் பரப்பி
இல்லறம் என்னும் இன்பத்தை
நீங்கள் பிரிந்து
இரண்டு வருடம் ஓடிப்போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.
உழைப்பை உரமாக்கி
பாசமாய் பணிவிடைகள்
பல செய்து வாழ்க்கை எனும் பாடத்தை
எமக்கு கற்றுத் தந்த
எமது உயிர் தந்தையே
இராண்டு ஆண்டுகள் கடந்தும்
உங்கள் நினைவுகள் எமை
தினமும் வாட்டி வதைக்கின்றது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..