யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இரவீந்திரன் தெய்வேந்திரன் அவர்கள் 28-12-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தெய்வேந்திரன், கண்ணகை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம், தங்கபிள்ளை தம்பதிகள், தவராசா, தங்கராசா மோகனராசா ஆகியோரின் அன்பு மருமகனும்,
நாகம்மா அவர்களின் பெறாமகனும்,
அமிர்தவல்லி அவர்களின் அன்புக் கணவரும்,
அஜிதன், பிரமிலா, டிலோசனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விமலா, கௌரி, தமிழினி, குமரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தீபக், தீபனா, கௌதம், கௌசன், சர்மிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரேஸ்மா, சுஸ்மா, றெபேக்கா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
பரமேஸ்வரி, யோகேஸ்வரன், இராசரத்தினம், சோதிலிங்கம், சந்திரபாலன், அனித்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடா Scarborough இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பேரிடர் காலத்தின் கட்டாயத்தினால் குடும்பத்தினர் மாத்திரம் அனுமதிக்கபட்டுள்ளனர்.