யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Maryland Frederick ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கமலாதேவி இரத்தினசபாபதி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உறைவு நீயே
பண்பின் பொக்கிஷம் நீயே
கருணையின் வடிவமே பண்பின் சிகரமே
உனது அன்பாலும் அரவணைப்பாலும்
உள்ளங்கவர் சிரிப்பாலும் அடுத்தவர்களிற்கு கூறும்
ஆறுதல் வார்த்தைகளாலும் அனைவரையும் கவர்ந்தீரே!
தெய்வத்தின் திருவடிக்கு சென்றவளே
தேம்பி நின்று நினைக்கிறோம்
அன்று நீவாழ்ந்த வாழ்வின் சிறப்பதை
ஆண்டுகள் இரண்டு என்ன
இரு நூறு ஆண்டுகள் சென்றாலும்
தேயாத நிலவாய் மனதில் பதிந்தாய்
ஓயாத நினைவுகளை உள்ளத்தில் தந்தாய் அம்மா
ஆத்மா சாந்தியடைய நாளும் இறைவனை வேண்டுகின்றோம்!
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்.