மரண அறிவித்தல்


திரு கதிரவேற்பிள்ளை தில்லைநடேசன்
Born 07/11/1944 - Death 04/11/2020 தும்பளை (Birth Place) கொழும்பு, லண்டன் (Lived Place)யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கு தும்பளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேற்பிள்ளை தில்லைநடேசன்(Siedles கொழும்பு, சுடரொளி பத்திரிகை நிறுவனம் ஆகியவற்றில் பணியாற்றியவர்) அவர்கள் 04-11-2020 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா கதிரவேற்பிள்ளை(முதலியார்) புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான விநாயகம்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜா அவர்களின் அன்புக் கணவரும்,
சுமித்திரா அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நடேசன், பரமேஸ்வரி, ஆனந்த நடராசா, சிவாம்பிகை மற்றும் பர்வதபத்தினிதேவி(தேவி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான லக்ஸ்மி, துரைராசா, பொன்னையா மற்றும் கந்தசாமி, செல்லம்மா ஆகியோரின்அன்பு மைத்துனரும்,
உதயகுமாரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
தரண்யா, ஹரிணி ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிரித்தானியாவில் தற்போது நடைமுறையிலுள்ள உள்ளிருப்பு நடவடிக்கையின் காரணமாக இறுதிநிகழ்வுகள் குடும்பத்தினருக்காக மட்டும் என மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதனை அறியத் தருகிறோம்.
பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள மண்டபத்தில், பார்வையிட விரும்பின் அம்மண்டபத்தின் சட்டவிதிகளுடன் ஒத்துழைக்குமாறும், அன்னாரது இல்லத்துக்குவருகை தருவதனைத் தவிர்க்குமாறும் தயவாக வேண்டிக்கொள்கிறோம்.
tyut
Tuan Truong 4 years ago![]()