மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி ஞானசிங்கராஜா(ஓய்வுபெற்ற கிராம சேவை உத்தியோகத்தர், அகில இலங்கை சமாதான நீதிவான்) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களின் அன்பு தெய்வமே அப்பா
உலகில் உள்ள அத்தனை உறவுகளின்
அன்பையும் எமக்கு தந்தவர் நீங்கள் அப்பா!
அன்று எம்மை வழிநடத்திய நாட்கள்
இன்றும் எம் நினைவலைகளில்
சுழல்கிறதே அப்பா!
எம் நல் வாழ்க்கைக்கு
தன் நலனை ஈந்துவிட்டு
நிலையான வாழ்வு
தேடிச் எங்கு சென்றீர்கள் அப்பா?
ஆண்டு ஒன்று கடந்தாலும் ஆறிடுமோ
உங்கள் நினைவலைகள் அப்பா....
உங்களின் ஆத்மா சாந்திபெற
இறைவனை என்றும் பிரார்த்திக்கும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர்கள்