யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளத்தை வசிப்பிடமாகவும், குப்பிளானை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த ஞானலிங்கம் சாரதாதேவி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நிஜமாய்கண்ட உம்மை
நிழற்படமாய் பார்க்கும்போது
நெஞ்சம் வலிக்கிறது அம்மா....!!
அழியாத நினைவலைகள் எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து வதைக்கின்றதே அம்மா
அழுதுகொண்டே இருக்கின்றோம்!
அன்புடன் அழைக்க நீ இங்கிலையம்மா...!!!
எங்கள் வாழ்வில் இன்பத்தை தந்த
அதிகமான துன்பத்தையும் தந்து போனீர்களே அம்மா..!!!
கண்னெதிரில் காண்போம் - இன்று
கண்ணை மூடி நினைக்கின்றோம்
கண்ணிருந்தும் கடவுள்
உமை காண வரம் கொடுக்கவில்லையே அம்மா....!!!.
நீங்களில்லா உலகானாலும்
உங்கள் நினைவுகளுடனே
நாம் வாழ்வோம் அம்மா...!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய நாள்தோறும்
இறைவனைப் பிரார்த்தனை செய்கின்றோம்
உங்கள் பிரிவால் வாடும்
கணவர், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர்கள்.