யாழ்ப்பாணம் நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வவுனிக்குளம் விநாயகபுரம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், ஜெர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் தனுஸ்கோடி பூரணம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
உதிரத்தைப் பாலக்கி ஊட்டியவள்
உதிரமெல்லாம் பாசத்தை ஏந்தியவள் எம் தாய்
தொட்டிலில் இட்ட அன்னையை
பத்தாண்டு தாண்டியும் அழுகின்றோம்
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா
ஆண்டுகள் பத்து அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா
திருப்ப முடியாத காலத்தை
உங்கள் நினைவுகளுடனும்
நிழல்ப்படத்தினூடாகவும்
திரும்பிப்பார்க்கின்றோம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி