ஆறுமுகத்தான் புதுக்குளம் ஓமந்தையைப் பிறப்பிடமாகவும், தோணிக்கல் சிவன்கோவில் வீதியை வதிவிடமாகவும் கொண்டதிருமதி. இராதாகிருஸ்ணன் தனலட்சுமி அவர்கள் 14-02-2024 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பதஞ்செல்வி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராதாகிருஸ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,
துர்க்கா(ஆசிரியர்- கனகராயன்குளம் மகாவித்தியாலயம்), கெளதினி(ஊழியர் எல்.டி. பினான்ஸ் வவுனியா), காலஞ்சென்ற சுரேன், கபிலன், லக்சுமி(டிஸ்ரிபியூட் உரிமையாளர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தினேசன்(சிவரதி வெதுப்பகம், ஓமந்தை சிவரதி றெஸ்ரோறண்ட் உரிமையாளர்), கிசோக்குமார்(வர்த்தகர்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தர்மராணி, காலஞ்சென்றவர்களான தர்மரஞ்சிதம், ரவீந்திரன் மற்றும் ஸ்ரீதரன்(ஸ்ரீ- கனடா), தர்மகுமாரி(பவானி- கொலண்ட்), பாஸ்கரன்(காந்தன் - கனடா), தர்மரூபி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்வின் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 16-02-2024 வெள்ளிக்கிழமை அன்று தோணிக்கல் சிவன்கோவில் வீதியில் உள்ள இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.