திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Skanderborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுந்தரமூர்த்தி பொன்னம்பலம் அவர்கள் 11-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா பொன்னம்பலம் தம்பதிகளின் அன்பு மகனும்,
சாதசிவம் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனநாயகி(செல்வி) அவர்களின் அன்புக் கணவரும்,
சரண்யா, லோஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நியுஜன் தேவராஜா அவர்களின் பாசமிகு மாமனாரும்,
பரமசிவம், பரமேஸ்வரி, விஜயகுமார், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெகதீஸ்வரன், பிரசாந்தினி மற்றும் காலஞ்சென்றவர்களான ஆனந்தநாயகி, ஜெயசித்ரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெய்டன் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.