யாழ்ப்பாணம் அல்வாய் வட்டுவத்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும்,பிரித்தானியா Birmingham ஐ வாழ்ந்துவந்தவருமான திருமதி வைஷ்ணவி இளங்கோ அவர்களின் 31ம் நாள் நினைவு அஞ்சலியும், நன்றி நாவிலும்.
உன்னைக் காணாத எம் கண்கள்
நித்திரையைத் தொலைத்துவிட்டு
நீரை வடிக்குதம்மா
பாசம் வளர்த்த பூமகளே உந்தன்
நேசம் மறப்பது எவ்வாறு
காலன் வந்து எடுத்தானோ எங்கள்
இனிய மகளே உன் உயிரை
நற்பண்புகளால் நிறைந்த மகள்
நல் வாழ்வு காட்ட வந்த மகள்
பெரு வாழ்வு வாழ்வாய் என்றிருந்தோம்
இன்று வெறுமையிலே வாடுகின்றோம்
உன் ஆத்மா பூரண சாந்தி பெற
எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், tamiltribute.com ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.