யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு யோகேஸ்வரன் சிவப்பிரகாசம் அவர்கள் 04-11-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிவப்பிரகாசம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரன், சரோஜினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராகாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆத்திகா, கீத்திகா, எனிக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அருண்குமார் அவர்களின் அன்பு மாமனாரும், துவானிக்கா, ஆதாரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
பவளராணி, தியாகராஜா, காலஞ்சென்றவர்களான விமலா, பஞ்சராசா, ராஜேஸ்வரன் மற்றும் மகேந்திரன், கோணேசலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பாலகிஷ்ணன், சுதந்திராதேவி, சுவாமிநாதன், பரிமளராணி, சிவஞானமணி, யோகராணி, முத்துலக்ஷ்மி, கோமதி, பிரேமலதா, காலஞ்சென்ற ஜெயந்தி, ஜெனனி, பிரமசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு tamiltribute.com ஊடாக கேட்டுக்கொள்கின்றோம்.