யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கோவிந்தி சின்னத்தங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்த எங்கள் அன்னையே!
நீங்கள் எங்களை பிரிந்து சென்று
இன்றோடு ஆண்டு ஒன்று ஆனதே!
உங்கள் இன்முகமும்புன்சிரிப்பும்
எங்கள்மனதை விட்டகலவில்லை
எங்களை எல்லாம் கண்ணீர் கடலில்
மூழ்க விட்டு எங்கு சென்றீர்கள் அம்மா
ஆயிரம் உறவுகள் அரவணைக்கஇருந்தாலும் அம்மா
உங்கள் அன்பிற்கு ஈடாகுமா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!
அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 22-09-2023 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும் மற்றும் மதியபோச நிகழ்விலும் அனைவரும் கலந்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.