யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், நயினாதீவை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நவரெட்ணம் சந்திரகாந்தன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
நற்பண்பின் பிறப்பிடமாய்
பாசத்தின் ஒளியுருவாய்
மலர்ந்த எம் ஆருயிர்த் தலைவா!!!
எம்மையெல்லாம் தவிக்கவிட்டுச் சென்று
மூன்றாண்டு காலம் வந்ததோ...!!!
எங்கள் எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத தீபச்சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கும்- நீர்!
கட்டிய மனையாள் கண்கலங்கி நிற்க
கண்காணாத தேசம் சென்றதேனோ?
நீர் பெற்ற பிள்ளைகள் பாசத்துக்கு
ஏங்கி நிற்க பாதியில் பிஞ்சுகளை பிரிந்ததேனோ?
உயிருக்கு மேலானவரே..!
நீர் மறைந்து போன பின்பும்
உம் நினைவுகளை சுமந்த உறவுகளின்
நெஞ்சமெல்லாம் கண்ணீரால்
நனைந்து போகின்றதய்யா!
ஆண்டுகள் எத்தனை ஆனாலும்
அகலாது உம் பிரிவுமறக்கமுடியுமோ?
எம்மையெல்லாம் ஆழாத்துயரத்தில்
ஆழ்த்திவிட்டு மீளாத்துயில் சென்றதை?..!
எம் அன்புத்தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்