சுவிஸ் Burgdorf ஐப் பிறப்பிடமாகவும், கனடா Toronto Ajax ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கீர்த்திக் இரவீந்திரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களை விட்டு நீ பிரிந்து
நான்கு ஆண்டு சென்றது
மறைந்த உன் நினைவு மட்டும்
நெஞ்சில் மாறாமல் உள்ளது
மகனே ஆண்டவன் அழைத்திட்ட
பின்னாலேஅழுகிறது
இதயம் வெறுமையாகவே
கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவேஆனாலும்
உன் நினைவுகள்புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும்
மகனே வாழ்ந்த கதை முடியுமுன்னே
நீவாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும் உன்நிலவு முகம் தேயாதடா!
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரைவற்றிப் போகாது
உன் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம் !!