யாழ். நெடுந்தீவு மேற்கு நெல்வரையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டையை வாழ்விடமாகவும் கொண்டிருந்த ஐயம்பிள்ளை நடராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று
போனாலும் எங்கள்
மனக் கவலை தீரவில்லை அப்பா!
உதிரத்தில் உருவாக்கி
உலகத்தில் எமைத் தாங்கி
உலாவ வைத்த உத்தமரே...
ஆண்டுகள் பல கடந்தாலும் என்றும்
எம் வாழ்வோடு இருப்பீர்கள் அப்பா
கனத்த மனதுடன்
உங்கள் ஆத்மாசாந்தியடைய
வேண்டி நிற்கின்றோம் !
*****************************************************************************
அமரர் நடராசா அமிர்தாம்பிகை
பிறப்பு -20-03-1945 *** இறப்பு - 13-02-2022
யாழ். நெடுந்தீவு மேற்கு நெல்வரையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டையை வாழ்விடமாகவும் கொண்டிருந்த நடராசா அமிர்தாம்பிகை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறாத துயரோடு
அணையாத தீபத்தைப்போல்
உங்கள் நினைவலைகள்
கலந்த நெஞ்சோடு வாழ்கின்றோம்
உங்கள் பாசத்தை மிஞ்சிட
இவ்வுலகில் யாருண்டு அம்மா?
கண்ணீரில் உங்கள் வார்த்தைகள்
எம்மை வாழ வைக்கும்
உங்கள் நினைவுகள்
எம்மை வாழ்த்திடும்...
என்றும் உங்கள் நினைவில் பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.