யாழ். எழுதுமட்டுவாள் தெற்கைப் பிறப்பிடமாகவும், இல. 15, குட்செட் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் முத்துலிங்கம் அவர்கள் 22-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனசபை சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை(உடையார்) செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,
தில்லைநாதன், பாக்கியநாதன்(நோர்வே), இந்திராணி(இளைப்பாறிய தாதியர்), காலஞ்சென்ற யோகநாதன், கயிலைநாதன்(தனியார் போக்குவரத்து நேரக் கண்பாணிப்பாளர்-கொடிகாமம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுஜீவன்(பிரான்ஸ்), ரூபன், குமார்(பிரான்ஸ்), விஜிதா(அபிவிருத்தி உத்தியோகத்தர்-வவுனியா),ரமேஸ்(பிரான்ஸ்), பிரதாப்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், உஷா, லக்ஷா, தர்ஷா, பாலரூபன், சர்மிளா, சுகன்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஜீரன், துளசிகன், ஹரிஷ், அஜீஸ், சுருதி, தமிஷா, பதுசன், லிவிஷா, பிரகீஷ், கிரிஷிகன், சருஷ்கா, அஷ்மிகா, சௌமிகா ஆகியோரின் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-08-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இல. 45/8, யாழ் வீதி , புதிய பஸ் நிலையம், வவுனியா அருகாமையில் நடைபெற்று பூந்தோட்டம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.