யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், நுணாவில், கொழும்பு பம்பலப்பிட்டி தொடர்மாடி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் நாகராஜா அவர்கள் 06-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் பாறுப்பிள்ளை(உசன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பூரணம் நாகராஜா(உசன், ஓய்வுநிலை ஆசிரியை- அமிர்தாம்பிகை மகாவித்தியாலம், நுணாவில்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான செல்வராஜா, அன்னலட்சுமி மற்றும் நவரத்தினராஜா, ராஜலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பராசக்தி, பரமநாதன், காலஞ்சென்ற பத்மநாதன், பரிமளம், பவளநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ரவீந்திரன்(நோர்வே), குமுதினி(இலங்கை), சுரேந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மனோகரன், வக்சலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பூஷிதா, லோஷிதா, தேஷிதன், அனோஜன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-08-2023 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.