யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலாயுதபிள்ளை கெங்கராசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன்னை பிரிந்தே என் உள்ளம் வாடுதே
பிரிவின்தூரம் அறிந்தும் உன்னைத் துரத்தித் தேடுதே!...
பாதிவழி வாழ்விலே ஏனோ நீ
பரலோகம் புகுந்தாய்
பக்கத்தில் நீங்கள் இருப்பது போல் நினைப்புடனே
பகல் இரவைக் கடக்குதையா
நேற்றுவரை நீ எம்முடன் வாழ்ந்து
நிறைவு கண்டதெல்லாம் நேற்றோடு போயிற்று
உன் நினைவொன்றே என் வாழ்வாச்சு அன்று
ஆனந்த மழையில் நனைய வைத்த
எங்களை இன்று கண்ணீர் மழையில்
நனைய வைத்ததேனோ அப்பா!
ஒளி விளக்காய் இருந்ததெங்கள் குடும்பமின்று
இருள் சூழ்ந்து கொண்டதேனோ அப்பா!
அன்போடு அணைத்து எம்மை ஆசையுடன்
முத்தமிட்டு ஆசைப்பட்ட அனைத்தையும்
வேண்டி தரும் எம் அருமை அப்பாவை காண்பதெப்போ!
தம்பியாய் நல்ல அண்ணனாய்
எப்போதும் எம்மோடு இணைந்து நின்றவனே!
ஆண்டு ஒன்றல்ல ஆயிரம் ஆனாலும்
மறக்க முடியாத மகத்துவம் நீ...
நினைவில், நித்திரையில், எங்கள் உணர்வில்
உள்ளத்தில் எப்போதும்
நீ கனவில், கற்பனையில்
எங்கள் கண்பார்க்கும் இடமெல்லாம் - நீ
நீ இல்லாத நாட்கள் உயிரில்லாத நொடிகளாய் போகுதய்யா..
நீ வாழ்ந்த வீடு நீ கடந்த இடம் என்று
உன்னை நாங்கள் நினைத்திருக்க நீ மட்டும்
எங்கு போனாய் எங்களைவிட்டு ஏன் பிரிந்தாய்?
ஓராண்டு என்ன ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவுகள் பசுமையாக எப்போதும்
எம் இதயத்தில் தெய்வமாய் சுமந்து நிற்போம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்