யாழ். அரியாலை பாலைவளவைப் பிறப்பிடமாகவும், முள்ளாத்தனை தெல்லிப்பழை, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பராசக்தி இராசநாயகம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 13/08/2023
ஈராண்டு கடந்து சென்றதம்மா- நீங்கள்
வாழ்ந்த நினைவுகளும் சுவடுகளும்
எம்நெஞ்சில் நிறைந்து நிற்குதம்மா!
கடவுள் எமக்குத் தந்த உயிர் என்பதா- இல்லை
கடவுளிலும், உயர் என்று சொல்வதா?
நிகரில்லாத எம் சுவாசமே தாயே
எங்கள்மனம் தினம் தினம் ஏங்கும் உறவும்
“அம்மா”ஆறுதல் கூறவோ அணைத்துக் கொள்ளவோ
உம்மைப் போல் யாருமில்லையம்மா
உங்கள்வெற்றிடத்தை நிரப்புவதற்கு ஏதுமில்லை இவ்வுலகில்!
அம்மா நாம் மறக்கவில்லை
உம்மை என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம்
என்றும்எம் அருகில் இருக்கின்றாய் - அதனால்
ஏங்கவில்லை நாம் இனிக் காண்போமா
என்று உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல் : குடும்பத்தினர்