யாழ். உசன் மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி புலேந்திரன் அவர்கள் 24-07-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், புலேந்திரன்(புலவர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கதிர்காமு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கதிரன் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வேணுகா, பானுகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, பொன்னுத்துரை, தவமணி மற்றும் திருஞானமூர்த்தி(பிரான்ஸ்), சிவசுப்பிரமணியம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அற்புதம், தெய்வேந்திரம் மற்றும் ராஜேந்திரன், சிவபாக்கியம், மகேந்திரன், சிவரத்தினம், லில்லிமலர், சிதம்பரப்பிள்ளை, இந்திராணி, நந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்ற பாலு, தங்கமணி, கமலாம்பிகை, தெய்வேந்திரம், சிறிதேவி ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனை 02-08-2023 புதன்கிழமை அன்று இலங்கை நேரம் ந.ப 12:00 மணியளவில் தெய்வகம், வீரபத்திரர் கோவில் வீதி, உசன், மிருசுவிலுள்ள அவரது இல்லத்திலும் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.